பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காய்ச்சல் மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தது. பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பாவந்த் மான் ஆய்வு செய்து வந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.