இந்தியா

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த பெண்... வீடியோ வைரல்

இளம்பெண்ணின் சாகச காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி விவாதத்தை தூண்டியது. பார்வையாளர்களும் தங்கள் காட்டமான கருத்துகளை பதிவிட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

ஆண்கள் ஓட்டும், பெரிய வடிவிலான மோட்டார் சைக்கிள்களை இயக்கும் பெண்கள் கெத்தாக நினைக்கிறார்கள். அதுபோன்ற பெரிய பைக்கில் ஒரு இளம்பெண் கைகளை விட்டுவிட்டு, சீட்டில் அமர்ந்து சாகசம் செய்யும் வீடியோ காட்சிகள் வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அவர் புனேவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

மஞ்சள் நிற டி.சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் சன்கிளாஸ் அணிந்தபடி அவர் மோட்டார் சைக்கிளில் கைப்பிடிகளை பிடிக்காமல் ஒரே பக்கமாக அமர்ந்து கைகளை அசைத்து, பிரபல சினிமா பாடலுக்கு பாவனை செய்கிறார். அப்போது ஒரு ரோஜா பூவையும் எடுத்து பார்வையாளர்களை நோக்கி நீட்டுகிறார்.

இளம்பெண்ணின் இந்த சாகச காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி விவாதத்தை தூண்டியது. சமூக ஊடக புகழுக்கான பைக் சாகசங்கள் அதிகரிப்பது ஆபத்தானது என்ற கருத்துடன், புனே பகுதி சமூக ஊடகங்கள் இதை பகிர்ந்தன. பார்வையாளர்களும் தங்கள் காட்டமான கருத்துகளை பதிவிட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். வீடியோ ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் பார்வைகளை எட்டியது.

SCROLL FOR NEXT