மும்பை விமான நிலையம்
இந்தியா

பெண் தோழியுடன் வெளிநாடு செல்ல முயற்சி: பாஸ்போர்ட்டால் வெளியான தொழில் அதிபரின் திட்டம்

பெண் தோழியில் பாஸ்போர்ட் விவகாரத்தில் பயணத்தை தொடர முடியாமல் போனது.

புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், தன்னுடைய மனைவியிடம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு தொழில் தொடர்பாக சென்று வருவதாக கூறி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், விமான நிலையத்திற்கு பெண் தோழி ஒருவரை அழைத்து வந்துள்ளார்.

பழைய பாஸ்போர்ட்

அதிகாரிகள் இருவருடைய பாஸ்போர்ட்டையும் சோதிக்கும்போது, அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை பரிசோதிக்கும்போது, அந்த பெண் ஏற்கனவே தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து போய்விட்டது என புகார் அளித்துள்ளார். அந்த பாஸ்போர்ட்டை எடுத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த தொழில் அதிபர், அந்த பெண்ணுடன் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தார். பின்னர், மனைவி கேட்டால் என்ன செய்வது என்று யோசித்த அவர், போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, விமான நிலையத்தில் உள்ள டெலிபோனில் இருந்து மனைவிக்கு போன் செய்து பாஸ்போர்ட் பிரச்சினை. அதனால் செல்போனை வாங்கி வைத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

கடத்தல் புகார் அளித்த மனைவி

அதன்பின் இருவரும் ரெயில்வே நிலையம் வந்துள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை தனது மனைவிக்கு போன் செய்து அதே வார்த்தையை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அவருடைய மனைவியால் கணவரின் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பெண், தனது கணவரை காணவில்லை. கடத்தப்பட்டிருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார். இதனைத் தொர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும், காவல் நிலையத்திற்கு சென்று, தான் பெண் தோழியுடன் வெளிநாடு செல்ல இருந்ததை அதிகாரிளிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்தான் மனைவியை சமாளிக்க இவர் பாஸ்போர்ட் பிரச்சினை என்று பொய்யான ஒரு கதையை உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் வெளிநாடு செல்ல இருந்தவரை, அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT