இந்தியா

மகாராஷ்டிராவில் கள்ளச்சாராயம் அருந்தி 15 பேர் உயிரிழப்பு - பலர் கவலைக்கிடம்

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வடி சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிம்ப்ரி சிஞ்ச்வடியின் தபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேரும், புனேயின் காலே படல் பகுதியில் 3 பேரும், ஹடப்சர் பகுதியில் 2 பேரும் என மொத்தம் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகிராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயத்தைத் தயாரித்த முக்கியக் குற்றவாளியான யோகேஷ் வான்கடே என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் மீது ஏற்கனவே பல சட்டவிரோத மதுபான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT