இந்தியா

ஆந்திராவில் நாளை முதல் ‘பல்ஸ் போலியோ’ முகாம்!

49.2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரவில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 49.2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்குவதற்கான ‘பல்ஸ் போலியோ’ தீவிரத் தடுப்பு முகாம் நாளை தொடங்குகிறது. தேசிய நோய்த்தடுப்பு தினத்தை முன்னிட்டு இந்த மூன்று நாள் சிறப்பு இயக்கம் நடத்தப்படவுள்ளது.

நாளை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 29,873 மையங்களில் குழந்தைகளுக்கு bOPV சொட்டுமருந்து வழங்கப்படும். முகாம் நடக்கும் முதல் நாளில் விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து சொட்டுமருந்து வழங்குவதற்காக, ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று களப்பணி ஆற்றவுள்ளனர்.

இந்த முகாம் முழு வெற்றியடைவதற்குக் கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் ஏபிஎஸ்ஆர்டிசி போக்குவரத்துத் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து செயல்படவுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தவறாமல் போலியோ சொட்டுமருந்து வழங்கி, அவர்களைப் போலியோ பாதிப்பிலிருந்து பாதுகாக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.