சோனியா காந்தி
இந்தியா

சோனியா காந்தி புத்தகத்திற்கு எதிர்ப்பு: சிவசேனா பெண் தலைவர் பால்தாக்கரே புகைப்படத்தை கிழித்ததால் சர்ச்சை

மணி சங்கர் உருவ பொம்மையை பால்தாக்கரே செருப்பால் தாக்கும் போட்டோ.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய ‘Belonging: A Journey of Love’ என்ற புத்தகத்திற்கு எதிராக சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) சார்பில் நடைபெற்ற போராட்டம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீர் சாவர்க்கர் குறித்து புத்தகத்தில் அவதூறான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், வரலாற்று வெள்ளை அடித்து பூசி மறைப்பதாகவும் குற்றம்சாட்டிய சிவசேனா தலைவர்கள், மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் பதிப்பகமான ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

பால் தாக்கரே படம் கிழிப்பு

இந்தப் போராட்டத்தின்போது சிவசேனா பெண் தலைவர் ஷாய்னா என்சி, சஞ்சய் நிருபம், ஆனந்த் துபே கலந்து கொண்டனர். அப்போது ஷாய்னா என்சி தவறுதலாக சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் புகைப்படத்தை கிழித்தார். இதனால் அங்கிருந்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை கவனித்த சஞ்சய் நிருபம் அவரிடம் எடுத்துக் கூறினார். உடனே ஷாய்னா என்சி கழித்த படத்தை பேப்பருக்கு அடியில் மறைத்து வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினரும் காங்கிரஸ் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் பெருமைக்கும் பால் தாக்கரேவை மதிக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தனர்.

ஷாய்னா என்சி விளக்கம்

இதற்கிடையே, தான் பால் தாக்கரேவின் படத்தைக் கிழிக்கவில்லை என்றும், மணிசங்கர் அய்யரின் புகைப்படத்தையே கிழித்ததாகவும் ஷாய்னா என்.சி. விளக்கம் அளித்துள்ளார்.

என்றாலும் இந்த சர்ச்சை மும்பை மாநகராட்சியில் பிரதிபலித்தது. அங்கிருந்து உத்தவ் தாக்கரே கட்சி உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே ஷாய்னா என்சி-ஐ பதவி விலக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உத்தவ் தாக்கரே சிவசேனா கண்டனம்

மேலும், மும்பை முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், பாலாசாகேப் பால் தாக்கரேவை இழிவுப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அவர் மீது ஏக்நாத் ஷிண்டு கட்சியினர் போலி அன்பு வைத்துள்ளனர் எனக் குற்றம்சாட்டினார்.

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பதிலடி

அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த அமே கோலே, சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் உத்தவ் தாக்கரே கட்சியிக்கு பகவத்கீதையாகியுள்ளது என்று பதில் கொடுத்துள்ளா்ர.

இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT