இந்தியா

கர்நாடகாவில் தீ பிடித்து எரிந்த தனியார் பஸ்

விபத்து குறித்து ஆனந்த்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனந்த்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு பஸ்சில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சாகர் நோக்கி இன்று காலை ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 2 பயணிகள் உள்பட 4 பேர் சென்று கொண்டு இருந்தனர்.

பஸ் தீ விபத்து

இந்த பஸ் ஆனந்த்பூர் அருகே உள்ள மும்பல் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 69-ல் சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது தீப்பிடிக்க தொடங்கியதும் பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் மற்றும் 2 பயணிகள் ஆகிய 4 பேரும் அவசர அவசரமாக கீழே இறங்கி காயமின்றி தப்பினர்.

போலீசார்

இதுப்பற்றி தெரிய வந்ததும் ஆனந்த்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு பஸ்சில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த விபத்து குறித்து ஆனந்த்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT