இந்தியா

மின்சார ஆட்டோ ஓட்டுநராக மாறிய பிரிட்டன் இளவரசர்

பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், மும்பையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோவை ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இந்தியா வருகை தந்தனர்.

சச்சினுடன் கிரிக்கெட் ஆடிய இளவரசர்

பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் மும்பை வந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள சாலையில் சிறுமிகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். அப்போது, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உடனிருந்தார். அதைத் தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கருக்கு இளவரசர் வில்லியம்ஸ் பந்துவீசினார்.

இவை அனைத்தையும் இளவரசி கேட் மிடில்டன் அருகில் இருந்து கண்டதுடன், அவரும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அவர்கள் இருவரும் சிறுமிகளுடன் உரையாடியதுடன், குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

ஆட்டோ டிரைவராக மாறிய இளவரசர்

இந்நிலையில், இளவரசர் வில்லியம் இன்று காலை மும்பை பாந்த்ரா-வொர்லி கடல் பாலத்தின் பின்னணியில் அமைந்துள்ள பாந்த்ரா ரெக்லமேஷன் பூங்காவிற்கு வருகை தந்தார்.

அப்போது, 'எர்த்ஷாட் பரிசு' இறுதிப் போட்டியாளர்கள் 15 பேரைச் சந்திப்பதற்காக, இந்தியாவின் 'மகிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி' நிறுவனம் தயாரித்த மின்சார ஆட்டோவை இளவரசர் வில்லியம் தானே ஓட்டி வந்தார். ஆட்டோவின் பின் இருக்கையில் இளவரசி கேட் மிடில்டன் அமர்ந்து புன்னகையுடன் பயணம் செய்தார்.

பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இளவரசர் மேற்கொண்ட இந்த பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT