இந்தியா

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தால் மிகுந்த வேதனை அடைகிறேன் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த ஐந்து மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த ஐந்து மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் 15 முதல் 20 பேரை மீட்கும் பணி இரவு வரை பல அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எக்ஸ் தளத்தில் இரங்கல்:

"டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்," என்று ஜனாதிபதி முர்மு 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் இரங்கல்:

முன்னதாக இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில், "டெல்லி சத்ய நிகேதனில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இதில் தங்களது அன்பிற்குரியவரை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT