பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ரம்நாத் கோவிந்த் 
இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள்: பிரதமர், குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை

இந்தியாவை வலுவாக்கவும், வளர்ச்சியடைய வைக்கவும் வாஜ்பாய் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புது டெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றியுள்ள செழுமையான சேவைகளால் நாம் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்தியாவை வலுவாக்கவும், வளர்ச்சியடைய வைக்கவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வளர்ச்சி முன்னெடுப்புகள் லட்சக்கணக்கான இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

SCROLL FOR NEXT