இந்தியா

தொகுதி மறுவரையறை முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலினுக்கு பிரகாஷ்ராஜ் கோரிக்கை

இது சுயநலமான முடிவு. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு துரோகம் செய்கிற இந்த முடிவை ஏற்கமுடியாது

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அளித்துள்ள ஆதரவைத் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு

நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாகக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆதரவு அளிப்பதாக திமுக விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்த முடிவை ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என் நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் தெரிவித்துள்ளதாவது

மதவாத சக்திகளுக்கு துணை போவது முதுகில் குத்தும் செயல்

திரு ஸ்டாலின் அவர்களே அவசர அவசரமாக பிஜேபி கொண்டு வருகிற தொகுதி மறுவரையறை மசோத மிகவும் ஆபத்தானது மதம் மொழி,இனம் , சிறுபான்மையினர் இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது இந்த ஆதரவு

இவற்றை எல்லோருக்கும் உணர்த்திய திமுகவே இன்று மதவாத சக்திகளுக்கு துணை போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார்

இது சுயநலமான முடிவு . ஒட்டுமொத்தமாக மக்களுக்கு துரோகம் செய்கிற இந்த முடிவை ஏற்கமுடியாது. மாநில உரிமைக்காக போராடி இந்தியாவிற்கே வழிகாட்டிய திமுக வரலாற்று பிழையான ஒரு முடிவை எடுத்திருக்க கூடாது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்வதாக வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு அடுத்த தலைமுறையை நிர்ணயிக்க போகிறது.

அடுத்த தலைமுறை இந்த முடிவால் உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் please just asking

என்று வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்

SCROLL FOR NEXT