இந்தியா

ஷாருக் கான் நலமுடன் உள்ளார்: மேனேஜர் தகவல்

அகமதாபாத் சென்ற ஷாருக் கான் கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.அதன்பின் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அகமதாபாத்:

பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று முன்தினம் மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என அவரது மேனேஜர் பூஜா தத்லானி தெரிவித்துள்ளார். மேலும், ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT