இந்தியா

தினமும் சாம்பாரா? போலீஸ் நிலையம் வரை சென்ற ‘சாப்பாட்டு சண்டை’ - பதறிப்போன காவலர்கள்!

குடும்பத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், போலீசார் பதறியபடி உடனடியாக கிராமத்திற்கு சென்றனர். கிராமத்திற்கு வந்த போலீசார் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தினமும் சாம்பார்

உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டத்தில் வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் இவருடைய மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தகராறு

நேற்று முன்தினம் இரவு சாம்பார் வைத்ததால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை கடுமையான வாக்குவாதம் செய்தனர்.

எவ்வளவு சொல்லியும் மனைவி தன் பேச்சைக் கேட்காததால் கோபமடைந்த கணவர், இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணை அழைத்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

கணவர் புகார்

குடும்பத்தில் சண்டை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், போலீசார் பதறியபடி உடனடியாக கிராமத்திற்கு சென்றனர். கிராமத்திற்கு வந்த போலீசார் உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு தினமும் பொரித்த குழம்பு வேண்டும் என்றும், ஆனால் தன் மனைவி எப்போதும் சாம்பார் போன்றவற்றை செய்து தன்னைப் புறக்கணிப்பதாகவும் கணவர் கூறினார்.

மறுபுறம், மனைவியும் தனது வாதத்தை விளக்கினார். பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் அமர வைத்து அமைதியாகப் பேச வைத்தனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் இது குறித்து விவாதித்து, ஒரு சிறிய விஷயத்தைப் பெரிய சண்டையாக மாற்ற வேண்டாம்.

போலீசார் அறிவுரை

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நடுராத்திரியில் இப்படி பண்றீங்களேம்மா என்று தலையில் அடித்தபடி அறிவுரை கூறினர்.

கணவன்-மனைவி இருவரும் ஒரு சமரசத்திற்கு வந்த பிறகு, போலீசார் புகாரை முடித்து வைத்தனர். குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.