இந்தியா

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்

சுசுகி மோட்டார் உள்ளிட்ட 50 ஜப்பானிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சுசுகி மோட்டார் நிறுவன தலைவர் டோஷிஹிரோ சுசுகி, வர்த்தகப் பெருநிறுவனமான இட்டோச்சு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 50 ஜப்பானிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஜூலை 1 முதல் 3 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய வர்த்தகக் குழு முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி கூட்டாண்மைகளில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக நிக்கெய் ஆசியா பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

பிரதமர் தகாய்ச்சி பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT