இந்தியா

டெல்லியில் நடந்த என்.டி.ஏ. கூட்டம்: பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த தலைவர்கள்

பிரதமர் பதவியில் 12 ஆண்டு நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில், பாஜக கூட்டணி ஆளும் 22 மாநிலங்களின் முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது, பிரதமர் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். அத்துடன், முதல் பிரதமர் நேருவை விட அதிக காலம பதவி வகித்தவர் என்ற சாதனைக்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.