பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அவரிடம் நலம் விசாரித்தார்.
நரேந்திர மோடி, இந்தியாவின் தற்போதைய பிரதமரும், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் ஆவார்.
இவர் 2001, அக்டோபர் 7 முதல் 2014, மே 22 வரை குஜராத் முதல் மந்திரியாகவும், 2014, மே 26 முதல் இந்தியாவின் 14-வது பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார்.
குஜராத் மாநில முதல் மந்திரி, நாட்டின் பிரதமர் என அதிகாரப் பதவியில் மோடி அமர்ந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்தது.
மக்கள் பணியில் 25 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி டெல்லி சரோஜினி நகரில் உள்ள பிள்ளையார் கோவிலில் இன்று வழிபாடு செய்தார்.
இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி வீட்டுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவரைச் சந்தித்த பிரதமர் மோடி நலம் விசாரித்தார். 25 ஆண்டு சேவை நிறைவடைந்த நாளில் அவரிடம் ஆசி பெற்றார்.