இந்தியா

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்- மாநாட்டில் பிரதமர் மோடி உரை

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைவரும் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோடுவோம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு புதிய அடையாளத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பானது,

மனிதாபிமானத்திற்கு முதலிடம் அளிக்கும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது. புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எமது முன்னுரிமைகளாகும்.

அதோடு, BRICS ஒத்துழைப்பை சாதாரண பொதுமக்களுடன் இணைப்பதில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்திகிறோம். அந்த இலக்கை மையமாகக் கொண்டு, 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

சீர்திருத்தங்கள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இனிமேலும் தாமதிக்க முடியாது.

உலகில் வர்த்தகத் தடைகள் அதிகரிக்கும் சூழலில், இந்தியா பிற நாடுகளுடன் பொருளாதார ரீதியான பாலங்களை அமைத்து வருகிறது.

உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொதுமக்களை மையமாக கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்படுகிறது.

மனிதநேயத்திற்கு முன்னுரிமை

மக்கள் மற்றும் மனிதநேயம், நிலைத்தன்மை என்பது தான் எங்களுக்கு முன்னுரிமை. பிரிக்ஸ் புதிய அடையாளம் பெற்றுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உத்வேகம் தொடர வேண்டும்.

பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைவரும் முன்னேற்ற பாதையை நோக்கி நடைபோடுவோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும்.

பிரிக்ஸ் கூட்டமைப்பினர் இணைந்து உலக அளவில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்து உலக நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்வது பற்றிய வரைபடத்தை தயாரிப்போம்.

நாம் பின்தங்கி உள்ளோம்

தற்போதைய உலக நிர்வாகக் கட்டமைப்பு ஒரு 'பிரமிடு' போல இயங்குகிறது. அதன் உச்சியில் அதிகாரமும், அதற்கு அடியில் அந்த முடிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளும் உள்ளன.

தெற்குலக நாடுகள் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதில் முன்வரிசையிலும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் கடைசி வரிசையிலும் தள்ளப்பட்டுள்ளன.

அந்த பிரமிடு அமைப்பை மாற்றி, அனைவருக்குமான சம தளமாகவும் கூட்டுப் பங்களிப்பாகவும் உருமாற்ற வேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டின் குரலுக்கு மதிப்பும், உரிமையும் இருக்க வேண்டும்.

மாற்றும் நேரம் இது

பிரிக்ஸ் உலக அரங்கில் ஒரு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம், ஒருமித்த கருத்தின் மூலம் முன்னோக்கிச் செல்கிறோம்.

அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமே நாம் முன்னேறப் பாடுபடுகிறோம். இப்போது நமது ஒற்றுமையையும், ஒருமித்த கருத்தையும், உலக அரங்கில் உறுதியான பலன்களாக மாற்ற வேண்டிய நேரம் இது.

பிரதமர் மோடி பரிந்துரை

பிரிக்ஸ் தொடர்ச்சி மற்றும் செயலாக்க பொறிமுறையை (continuity and implementation mechanism) உருவாக்க நான் பரிந்துரைக்கிறேன்.

'ட்ரொய்கா' (Troika) ஏற்பாடு மூலம் அனைத்து முயற்சிகளையும் முடிவுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இது உதவும்.

மேலும், ஒவ்வொரு முடிவுடன் தொடர்புடைய மையப்புள்ளி (nodal point), காலக்கெடு மற்றும் செயலாக்க நிலையை பதிவு செய்ய பாதுகாப்பான டிஜிட்டல் களஞ்சியத்தையும் உருவாக்கலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT