இந்தியா

சத்குரு விரைந்து நலம்பெற வேண்டும்: பிரதமர் மோடி

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறேன் என்றார்.டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என தெரிவித்தார்.

புதுடெல்லி:

கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரமாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கிறேன். டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் விரைவில் நலம்பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவுடன் பேசினேன். அப்போது அவர் பூரண நலத்துடன் இருக்கவேண்டும். விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT