இந்தியா

பிரதமர் மோடி ஒரு வார பயணமாக பிரான்ஸ், ஸ்லோவாகியா செல்கிறார்: ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்கிறார்

ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடி மோடி ஒரு வாரம் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்கிறார். வருகிற 13-ந்தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகர் சென்றடைகிறார். அதன்பின் ஜூன் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஸ்லோவாகியா செல்கிறார்.

பின்னர் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர் செல்கிறார். அங்கு ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜூன் 14-ந்தேதி நீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாட்டு உறவு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது இந்தியா- பிரான்ஸ் இடையிலான உறவு குறித்தும், இந்த தொடக்கத்தில் பேசப்பட்ட சிறப்பு குளோபல் மூலோபாய ஒத்துழைப்பை உயர்த்துவது பற்றியும் பேச இருக்கிறார்கள். அங்கு இருவரும் சேர்ந்து Bharat Innovates நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு, ஸ்லோவாகியா செல்கிறார். 1993-ஆம் ஆண்டு ஸ்லோவாகியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா பிரதமர் ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.