இந்தியா

பீகார் அமைச்சரவை நாளை விரிவாக்கம்: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதிய அமைச்​சரவை விரிவாக்க விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்கிறார்​.

பீகாரில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. மூத்த தலை​வரான சாம்​ராட் சவுத்ரி சமீபத்தில் புதிய முதல் மந்திரியாக பதவி​யேற்​றார்.

ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த விஜேந்​திர யாதவ், விஜய் சவுத்ரி ஆகியோர் துணை முதல்​ மந்திரி​களாகப் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் அமைச்​சரவை நாளை விரி​வாக்​கம் செய்​யப்​பட உள்ளது.

இதில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 பேர், ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த 11 பேர், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்​சியைச் சேர்ந்த 2 பேர், இந்துஸ்தானி அவாமி மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு​வருக்கு அமைச்​சர் பதவி வழங்கப்பட இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின.

பாட்​னா​வில் புதிய அமைச்​சர்​கள் பதவி​யேற்பு விழாவை நடத்த ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. இந்த ​விழா​வில் பிரதமர் மோடி, தேசிய தலை​வர் நிதின் நவீன், உள்துறைமந்திரி அமித்ஷா, முன்னாள் முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட​ பலர் பங்கேற்கின்றனர்​.