இந்தியா

தொகுதி மறுவரையறையில் எந்த ஒரு மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டப்படாது: பிரதமர் மோடி

தொகுதி மறு வரையறை குறித்த கேள்விகளுக்கு அமித்ஷா விளக்கம் அளித்துவிட்டார் என்றார்.

தொகுதி மறுவரையறை மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

இங்குள்ளவர்கள் ஒரு சில மாநிலங்களின் ஒரு சில பகுதியின் நன்மையை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது.

தொகுதி மறுவரையறை குறித்த கேள்விகளுக்கு அமித்ஷா விளக்கம் அளித்துவிட்டார்.

தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலத்திற்கும் பாகுபாடோ, அநீதியோ இருக்காது.

எந்த ஒரு விஷயத்திலும் எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது.

மாநிலங்களுக்கான விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் மாற்றமில்லை என தெரிவித்தார்.