இந்தியா

குவைத் மன்னருடன் டெலிபோனில் பேசிய பிரதமர் மோடி

மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய பிரதமர் குவைத் மன்னருடம் பேசியுள்ளார்.

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக மேற்காசிய பிராந்திந்தியத்தில் ஸ்திரதன்மையற்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, குவைத் மன்னர் ஷேக் மிஷால் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா உடன் போனில் பேசியுள்ளார். அப்போது மேற்காசிய பிராந்தியில் நிலவும் பதற்றம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். அத்துடன், குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய கண்ணியம் ஆகியவற்றின் மீதான தாக்குதலுக்கான கண்டனைத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்து்ளளார்.

இருவரும் மாறிவரும் பாதுகாப்பு சூழல் குறித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்காக, பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT