அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களுக்கான இரவு விருந்து நிகழ்வில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கு பதற்றமான சூழல் நிலவ, முன்னெச்சரிக்கையாக டிரம்ப், வான்ஸ் உள்ளிட்ட முக்கிய நபர்களை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டிரம்ப், அவரது மனைவி, துணை அதிபர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பியதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.
டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க எனது வாழ்த்துகள். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.