இந்தியா

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893, செப்டம்பர் 11-ம் தேதி சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய தினம் இன்று என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பிறந்தவர். இந்து மதத்தை உலகளாவிய மதமாக உயர்த்தியவர் என்று போற்றப்படுகிறார்.

இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர்.

சிகாகோ உரை

சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த ‘சர்வதேச மதங்களின் நாடாளுமன்றம்’ என்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையை, "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே" என்ற வாக்கியத்துடன் ஆரம்பித்தார்.

அவரது உரை அங்கிருந்த சுமார் 7 ஆயிரம் பிரதிநிதிகளின் மனதை வென்றதோடு மட்டுமின்றி, இந்து மதத்திற்கான சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.

எழுச்சியூட்டும் விவேகானந்தர் உரை

இந்நிலையில், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினத்தை பிரதமர் மோடி இன்று நினைவு கூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 11 செப்டம்பர் 1893, சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நாகரீக நெறிமுறையைப் படம்பிடித்துக் காட்டியது. அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

25வது ஆண்டு நினைவு நாள்

2001 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரிக்கும் வேளையில், பிரதமர் மோடி விவேகானந்தரின் உரையை மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT