பிரதமர் மோடி - ஏபிஜே அப்துல் கலாம் 
இந்தியா

91-வது பிறந்தநாள்: அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழாரம்

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் அப்துல் கலாம் பெரிதும் போற்றப்படுகிறார்.

Suresh K Jangir

புதுடெல்லி:

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர்ந்த ஜனாதிபதியாகவும் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பெரிதும் போற்றப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.