பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் பேரணிகளுக்கு இடையே, அப்பகுதியில் பிரபலமான தெரு உணவான ஜால்முரியை சுவைத்துப் பார்த்தார்.
ஞாயிற்றுக் கிழமையன்று புருலியா, ஜார்கிராம், மெதினிபூர் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நான்கு பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இடையில், அவர் ஜார்கிராமில் உள்ள ஒரு சிறிய கடையில் நின்று ஜால்முரியை சுவைத்து பார்த்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "கூட்டம் நிறைந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில், மேற்கு வங்கம் முழுவதும் நடைபெற்ற நான்கு பேரணிகளுக்கு இடையே, ஜார்கிராமில் சுவையான ஜால்முரி சாப்பிட்டேன்," என்று குறிப்பிட்டார். இத்துடன் வீடியோ ஒன்றையும் இணைத்திருந்தார்.
அந்த வீடியோவில், அவர் கடைக்காரரிடம் சிற்றுண்டியை தயாரித்துத் தருமாறு கேட்பது தெரிகிறது. அவர் பணம் தருவதாகக் கூறியபோது, விற்பனையாளர் முதலில் மறுத்தாலும், அவர் வற்புறுத்திய பிறகு பணத்தை வாங்கிக்கொண்டார்.
ஜால்முரி என்பது மிளகாய், வெங்காயம் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு பொரி அரிசிக் கலவையாகும்.