இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் 1951 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் கோவில் இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
சோம்நாத் மகாதேவிற்கு சிறப்புப் பூஜை, கும்பாபிஷேகம் மற்றும் த்வஜரோஹணம் (கொடியேற்றம்) ஆகியவைகளை செய்து ஆழ்ந்த மனதுடன் கடவுளை வணங்கி வழிபட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி கோவில் வளாகத்திற்கு செல்வதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தும் அவர்களுடன் சேர்ந்து சுற்றுப்பயண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சோம்நாத் கோவிலின் மறுசீரமைப்பிற்கு முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கும் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்.
அந்த சிறப்புமிக்க நாணயத்தின் ஒரு பக்கம் சோம்நாத் கோயிலின் படம் மற்றும் "இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பக்தி கொண்டாட்டத்தின் 1000 ஆண்டுகள்" என்ற வாசகமும், மறுபக்கத்தில் அசோக ஸ்தம்பமும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க சோம்நாத் கோயிலின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் நினைவு முத்திரை மற்றும் ரூ.75 என்ற நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.