இந்தியா

எல்.ஆர்.ஈஸ்வரி பாடலை பகிர்ந்து, நவராத்திரி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

நவராத்திரி அன்று அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ என்ற அம்மன் பக்திப் பாடலின் யூடியூப் லிங்கையும் பகிர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலே அனைத்துக் கோவில்களிலும் அம்மனை வழிபட்டு வருகிறனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

சக்தி சாதனா எனும் மாபெரும் திருவிழாவான நவராத்திரி அன்று, அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்னை ஜகதம்பாவின் அருளால் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

தேசத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான உறுதியை மேலும் வலுப்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘கற்பூர நாயகியே கனகவல்லி’ என்ற அம்மன் பக்திப் பாடலின் யூடியூப் லிங்கையும் பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT