ராகுல் காந்தி- பிரதமர் மோடி
இந்தியா

நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசவில்லை: ராகுல் காந்தியை மறைமுகமாக கிண்டல் செய்த பிரதமர் மோடி

தனியார் நிறுவனமான Skyroot Aerospace தயாரித்த விக்ரம்-1 என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் "இந்தியாவின் இளைஞர்கள் விண்ணிற்கு புதிய ராக்கெட்டை செலுத்தியுள்ளனர். இது ஒரு அபாரமான வெற்றி. ராக்கெட்டை ஏவிய தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து இளைஞர்களின் வயது சராசரி 28 வயதாகும். நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை" என்றார்.

மேலும், 56 வயது குறித்து மிகப்பெரிய அளவில் பிரதமர் மோடி பேசாமல் ""விண்வெளியில் இந்தியாவின் கொடியை நாட்டியுள்ள சராசரி வயது 28 கொண்ட இந்த இளைஞர்களுக்கு நிச்சயமாகப் பாராட்டுகள் உரித்தாக வேண்டும். இத்தகைய சாதனைகளே இந்தியாவுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கின்றன" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கண்டனம்

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு 56 வயதாகிறது. கடந்த ஜூன் மாதம்தான் அவருடைய பிறந்த நாள். ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இளம் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் வகையில் மோடி மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கூறுகையில் "இது வெட்கக்கேடான விஷயம். ராகுல் காந்தி உங்களிடம் வேலை கேட்கவில்லை. அவர் ஒரு 56 வயது இளைஞரைப் பற்றியும் பேசவில்லை. அவர், 20, 22, 25, அல்லது 26 வயதுடைய இளைஞர்களைப் பற்றிப் பேசுகிறார். அவர்கள் அரசு வேலைகளைப் பெற முடியாமல், வேலையில்லாமல் நம் நாட்டில் அலைந்து திரிகிறார்கள். தங்கள் நிலங்களை விற்றுத் தயாரானாலும், தேர்வுத் தாள்கள் கசிந்துவிடுகின்றன.

மொத்தம் 4 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் உயரம் 24 மீட்டர் ஆகும். 350 கிலோ வரையிலான செயற்கைகோள்களை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த ராக்கெட்டின் என்ஜின்கள் முப்பரிமாண அச்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை.

ஸ்கைரூட் நிறுவனம் கூறும்போது, "இந்தியாவின் அறிவியல் மற்றும் விண்வெளி பயணத்தை வடிவமைத்த 3 தொலைநோக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முன்னோடியான க்ரம் சாராபாய், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் நுண் சிற்பங்களை கொண்ட் சிறிய பேலோடு உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.