ஜப்பான் ஓபன் சர்வதேச பேட் மிண்டன் போட்டி டோக்கியோவில் நடை பெற்றது. இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி யில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து -முன்னாள் உலக சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்) மோதினார்கள்.
இதில் 31 வயதான பி.வி.சிந்து 21-17, 21-17 என்ற நேர்செட் கணக்கில் யமா குச்சியை அதிர்ச்சிக் கர மாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
2024-ம் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு இந்த பட்டத்தை கைப்பற்றி உள்ளார். 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுக்கு பிறகு சிந்து கைப்பற்றிய சிறப்பான வெற்றி இதுவாகும்.
சிந்து ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பேட்மிண்டன் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய பேட்மிண்டனுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!
ஜப்பான் ஓபன் 2026 போட்டியில் வெற்றி பெற்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள். போட்டி முழுவதும் அவரது மனவுறுதியும் அபாரத் திறமைகளும் முழுமையாக வெளிப்பட்டன. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் அவர் என்பது இந்தச் சாதனையை மேலும் சிறப்பாக்குகிறது. இது நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை விளையாடி ஜொலிக்கத் தூண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.