கர்நாடகத்தின் புதிய முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல் மந்திரியாக பரமேஸ்வரா பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழா பெங்களூரில் உள்ள லோக்பவனில் நடந்தது. டி.கே.சிவக்குமாருடன் 14 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்ற டி.கே. சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். மக்களின் நலனுக்காக மத்திய அரசு கர்நாடக அரசுடன் இணைந்து செயல்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.