இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.

நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

நிதி ஆயோக்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றே டெல்லி சென்றிருந்தார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதன் பிறகு சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.

இன்று காலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திற்கு காலை 9 மணிக்கு சென்றடைந்தார். அவருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார் உடன் சென்றார். அங்கு மத்திய அரசின் உயர் அதிகாரிகள் அவர்களை வரவேற்று கூட்ட அரங்கில் அமர வைத்தனர்.

கூட்டம் தொடங்கியது

அதன் பிறகு சரியாக காலை 9.15 மணிக்கு நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி வரவேற்புரையாற்றியதும் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அகர வரிசைப்படி பேச அழைக்கப்பட்டனர்.

அந்த வகையில் காலையில் ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேச, மாநில முதல்-மந்திரிகள் பேசினார்கள். தங்களது மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களுக்கு போதுமான நிதி வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.