இந்தியா

West Asia crisis : முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மேற்காசிய போர்ச்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேற்காசிய போர் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு மாநிலங்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் வலுவான வளர்ச்சிப் பாதை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனாபெருந்தொற்றின் போது ​மத்திய அரசும் மாநிலங்களும் இணைந்து பரிசோதனை, தடுப்பூசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றில் ஒத்துழைத்த முன்மாதிரியான 'டீம் இந்தியா' உணர்வை நினைவு கூர்ந்தார். அதே உணர்வு இப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த உலகளாவிய நெருக்கடியை நாடு திறம்பட எதிர்கொள்ள முடியும். அதே 'டீம் இந்தியா' உணர்வை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்க முதலமைச்சர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

SCROLL FOR NEXT