இந்தியா

அமெரிக்காவுக்கு வருகை தரும்படி டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்கோ ரூபியோ

பிரதமர் மோடி- மார்கோ ரூபியோ பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்க வெளியுறவு மந்தரி மார்கோ ரூபியோ 4-வது பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது மனைவியுடன் இந்தியா வருகை தந்துள்ள அவர், இன்று மாலை டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது இந்தியா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

டிரம்பின் 2-வது ஆட்சிக்காலத்தில் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகம் தொடர்பாக ஒருவித பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவுக்கு வருமாறு டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ரூபியோவுடன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கலந்து கொண்டார். அவர் “சீனா தனது பலத்தை நிலைநாட்ட முயன்று வரும் இந்தோ- பசிபிக் பிராந்தியம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என்றார்.