இந்தியா

பங்கிபூர் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் பயணம் ரத்து: சாடிய தேஜஸ்வி

3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பீகார் மாநிலத்தின் பங்கிபூர் எம்.எல்.ஏ.வான நிதின் நபின் சமீபத்தில் பா.ஜ.க. தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தாடியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோசடி வழக்கில் தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

குஜராத்தின் மன்சல்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் காலமானதால் அவரது தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல்

இதற்கிடையே, காலியாக உள்ள இந்த 3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இந்நிலையில், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரீய ஜனதா தளகட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் பயணம் ரத்து

ஒரு பாலத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மாநிலத்திற்கு வரத் திட்டமிட்டிருந்தார்.

பிரதமரின் பயணம் குறித்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

மாணவர் போராட்டங்களும், தனது அரசின் 'பெருகிவரும் மக்கள் செல்வாக்கு இழப்பும்' பா.ஜ.க.வின் தோல்விக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்ததால், பிரதமர் நரேந்திர மோடி தனது பீகார் பயணத்தை ரத்து செய்துள்ளார் என தெரிவித்தார்.