ஞானேஷ் குமார்- உச்சநீதிமன்றம்
இந்தியா

இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாருக்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது எப்படி என்று விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் உள்ளார். அவருடன் மேலும் இரண்டு ஆணையர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் 3 கட்டங்களாக வாக்காளர்கள் பட்டியலில் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.

13 கோடி வாக்காளர்கள் நீக்கம்

தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் SIR பணி முடிவடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3-வது கட்டமாக நடைபெற்று இறுதி வாக்காளர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.

இந்தியா முழுவதும் சுமார் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR செயல்முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தன. உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.

SIR பணியின்போது சரியான முறையில் படிவத்தை பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் பெயர் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அவர்கள் பின்னர் படிவம் 6 முதல் பெயர்களை சேர்க்கலாம். இவ்வாறு படிவம் 6 கொடுக்கப்படும்போது அவர்களுடைய ஆதாரங்களை தேர்தல் ஆணையம் கேட்டது, அப்போது அவர்களுடைய உறவினர்கள் பெயர் பழைய SIR பணி எடுத்த வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்திருந்ததா? என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. மேலும், தங்களுடைய ஆதாரங்கனை திரட்ட பெரும்பாலான வாக்காளர்கள் திணறினர்.

இதன்விளைவாக சுமார் 13 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இந்த நிலையில்தான் படிவம் 6 தீருத்தப்பட்டது மற்றும் தரவுகள் நிர்வகித்தல் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் முடிவுக்கு மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்து, மாற்று கருத்தை கொண்டிருந்ததாக செய்திகள் வெளியானது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இதனால் ஞானேஷ் குமார் பாஜக-வுக்கு ஆதரவாக தன்னிச்சையாக செயல்பட்டடுள்ளார் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று என கோரிக்கைகள் விடுத்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தனித் தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. அத்துடன் 13 கோடி வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது எப்படி? என விசாரனை நடத்த SIT அமைக்கக்கோரி மனுவில் கூறப்பட்டுள்ளது.

சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் "மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி ஞானேஷ் குமார் மேற்கொண்டதாகக் கூறப்படும் முடிவுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மென்பொருள் மாற்றங்கள் ஆகியவை அரசியலமைப்புக்கு முரணானவை மற்றும் செல்லாதவை ஆகும்.

படிவம் 6

அந்த முடிவுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட வேண்டும். அசல் 'படிவம் 6' (Form 6) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது கோருகிறது. நடைபெற்று வரும் 'சிறப்பு தீவிர திருத்தப் பணி'யின் (SIR) போது, ​​13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து எவ்வாறு நீக்கப்பட்டன என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு (SIT) மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடமை தவறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஞானேஷ் குமார், மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மனிஷ் கார்க் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் சீமா கன்னா ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT