இந்தியா

தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசு கடந்த 10-ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சட்டசபையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்போது ஊழல் நடைபெற்றதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே, அமமுக தலைவர் டிடிவி தினகரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த குதிரை பேரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.