பினராயி விஜயன் 
இந்தியா

வயநாடு காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் - பினராயி விஜயன் கண்டனம்

ராகுல் காந்தி எம்.பி.யின் கட்சி அலுவலகம் கேரளாவின் வயநாடு தொகுதியில் அமைந்துள்ளது.கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்த அலுவலகம் மீது நேற்று இந்திய மாணவர் கூட்டமைப்பு தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தொிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கேரள முதல் மந்திாி பினராயி விஜயன் கண்டனம் தொிவித்தா.

இதுதொடா்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டா் செய்தியில், ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், இது அதிகமாக இருக்கக்கூடாது. இது தவறான போக்கு. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளாா்.