ராகுல் காந்தி 
இந்தியா

Kerala மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டனர்: ராகுல் காந்தி

கேரளத்தில் இருந்து வரும் செய்தி மிகத் தெளிவானது. அங்குள்ள மக்கள் ஒரு மாற்றத்துக்கு தயாராக உள்ளனர் என்றார் ராகுல் காந்தி.

மாலை மலர்

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 4-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல்களில் கேரளாவில்தான் முதலாவதாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி உள்ளது.பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ.வும் பல இடங்களில் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கேரள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

என்னைப் பொறுத்தவரை கேரளம் என்பது எனது இல்லம்; கேரள மக்கள் எனது குடும்பத்தினர். அவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்த அனைத்துக்காகவும் அவர்கள் என் மீது பொழிந்த அன்பு மற்றும் அரவணைப்புக்காகவும் நான் அவர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். நான் எப்போதும் அவர்களுக்கு துணையாகவே இருப்பேன்.

கேரளத்தில் இருந்து வரும் செய்தி மிகத் தெளிவானது. மக்கள் ஒரு மாற்றத்துக்கு தயாராக உள்ளனர். மக்களின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, நேர்மையுடன் அவற்றை நிறைவேற்றித் தரும் ஒரு அரசாங்கத்தையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமைய இருக்கும் யுடிஎப் அரசாங்கத்துடன் இணைந்து, இந்த அழகிய மாநிலத்துக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன். கேரளம் வெல்லும், யுடிஎப் முன்னின்று வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்