இந்தியா

ஐதராபாத் மெட்ரோ ரெயில் ஜன்னலில் கால் வைத்தபடி சென்ற பயணிக்கு அபராதம்

அந்த பயணி சமூக உணர்வு இல்லாமல் மெட்ரோவில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோலில் இருந்து ராயதுர்கம் செல்லும் மெட்ரோ ரெயிலில் ஒரு ஆண் பயணி தனது காலை மெட்ரோ ரெயில் ஜன்னல் கண்ணாடி மீது வைத்தபடி அமர்ந்து கொண்டார்.

இதற்கு சக பயணிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இருந்தாலும் அவர் நான் இப்படித்தான் உட்கார்ந்து கொள்வேன். உங்களால் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஒரு பயணி உடனே மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கு புகார் செய்தார்.

ராயதுர்கம் மெட்ரோ நிலையத்தில் அவரை போலீசார் பிடித்தனர். அவர் மீது ராயதுர்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததுடன் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சைதன்யா என்று கூறினார்.

அவரது தவறான நடவடிக்கைக்கு மெட்ரோல் ரெயில் சட்டப்படி 250 ரூபாய் அபராதம் விதித்ததாக ஐதராபாத் மெட்ரோ ரெயில் லிமிடெட் ( ஹெச் எம் ஆர் ) ஜி எம் செக்யூரிட்டி ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்தார்.

அந்த பயணி சமூக உணர்வு இல்லாமல் மெட்ரோவில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அவரது நடவடிக்கையை பற்றி நூற்றுக்கணக்கான நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.