இந்தியா

நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

அவர் திரும்பி வரும் விமான பயணத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசரகால வெளியேும் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயணி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை (நவ. 2) அதிகாலை 12.30 மணியளவில், டெல்லியில் இருந்து புனே நோக்கி பறந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் விமான பணியாளர்கள் மற்றும் சக பயணிகளை பீதியில் ஆழ்த்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பயணி மீது விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்குப் பதிவு:

இண்டிகோ ஊழியரான ஓம்கார் வினோத் குல்கர்னி (28) என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 125 (மனித உயிருக்கோ அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கோ ஆபத்தை விளைவித்தல்) மற்றும் விமான சட்டத்தின் பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துணை ஆணையர் (VII) அபிநாஷ் குமார், அந்தப் பயணி கதவைத் திறக்கும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். "அவர் மூடியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​தவறுதலாக நெம்புகோலை இழுத்துவிட்டார். குழுவினர் சரியான நேரத்தில் அவரைத் தடுத்துவிட்டனர்," என்று குமார் கூறினார்.

மென்பொருள் துறையில் பணிபுரியும் சந்தேக நபர், சஸ்வாடில் வசித்து வருவதாகவும், டெல்லிக்கு சென்று வந்துள்ளதாகவும் குமார் கூறினார். அவர் திரும்பி வரும் விமான பயணத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்தது.

சேதப்படுத்துவது சட்டவிரோதம்:

உண்மையான அவசரநிலை இருந்தாலன்றி, அவசரகால வெளியேறும் கதவை சேதப்படுத்துவது சட்டவிரோதமாகும். அந்தப் புகாரில், சந்தேக நபரின் செயல்கள் மற்ற பயணிகளுக்கு ஆபத்தை விளைவித்ததாக விமான நிறுவன ஊழியர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பயணி 19D இருக்கையில் அமர்ந்திருந்ததாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. "அந்த நபர் ஜன்னல் திரையை திறக்க முயன்றபோது, ​​தவறுதலாக அவசரகால கதவு நெம்புகோலை அழுத்திவிட்டார் என்று நாங்கள் அறிகிறோம்.

அது கதவை திறந்து, அவசரகால சறுக்குப்பாதையை வெளியே நீட்டியிருக்கும். இதை விமான பணியாளர்கள் சரியான நேரத்தில் பார்த்து, அவரை நிறுத்த சொன்னார்கள்," என்று அந்த வட்டாரம் கூறியது. வெளிப்படையான உள்நோக்கம் இல்லாதபோதிலும், விமான பணியாளர்கள் அவரை ஒரு ஒழுங்கற்ற பயணியாக கருதி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT