இந்தியா

குப்பை கிடங்கை சீர்படுத்தும் பயோ மைனிங் திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்

15,000 மெட்ரிக் டன் திடக்கழிவை சுத்திகரிக்க மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது.

மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தியோனார் பழைய கழிவு உயிரிச் சுரங்கத் திட்டம் செயல்படுவதற்கான பகுதி அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதலானது ஒரு நாளைக்கு 15,000 மெட்ரிக் டன்கள் என்ற அனுமதிக்கப்பட்ட கொள்ளளவிலான உயிரிச் சுரங்கச் செயல்பாடுகளை உள்ளடக்கியது.

மேலும் இது, தியோனாரில் ஏறத்தாழ 110 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் பெரும் நோக்கத்துடன், சுமார் 185 லட்சம் டன்கள் அளவிலான கழிவுகளை அறிவியல் ரீதியாக சுத்திகரிக்க உள்ளது.

மும்பையில் தினந்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன்கள் திடக்கழிவுகள் உருவாகின்றன. உயிரிச் சுரங்க செயல்முறையின் மூலம் தேங்கியுள்ள கழிவுகள் பல்வேறு பயனுள்ள மற்றும் எஞ்சிய கூறுகளாகப் பிரிக்கப்படும்.

இவற்றில் கழிவுவழி எரி பொருள் (RDF), பதப்படுத்தப்பட்ட உரம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் ஆகியவை அடங்கும்.

மீட்கப்பட்ட பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள், கந்தல் துணிகள் மற்றும் துணி போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.

அதே சமயம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை சாலைகள் அமைத்தல் பணிகளுக்கும், RDF அலகுகள் அல்லது சிமெண்ட் ஆலைகளுக்கு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

மண் போன்ற துகள்கள் மற்றும் மண் சார்ந்த கூறுகள் நில வடிவமைப்பு, தோட்டக்கலை, சாலை நடுப்பகுதிகள் மற்றும் பசுமைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த கழிவுகள் பயன்படுத்தப்பட உள்ளது.