நாடாளுமன்றம்  
இந்தியா

நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற மழைக்காக கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவை கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டது.

இன்று அவை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைப்பு

நீட் தேர்வு சர்ச்சை மற்றும் அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிதி முறைகேடு புகார் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இந்தச் சலசலப்பில் ஈடுபட்டன.

மக்களவை தொடங்கியதும், சபாநாயகர் ஓம் பிர்லா முன்னாள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.

இரங்கல் குறிப்புகள் வாசித்து முடிக்கப்பட்ட உடனே, நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அயோத்தி ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அவையின் அமளிக்கு இடையே, சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களை அமைதி காக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.

எனினும், முழக்கங்கள் தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதேபோல மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இது குறித்துசெய்திலாயர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய், "மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லை என்பது கடந்த சில நாட்களாகவே தெளிவாக புலப்படுகிறது.

ராமர் கோவில் விவகாரமோ அல்லது நீட் விவகாரமோ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை அவர்களால் இதுவரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முக்கியப் பிரச்சினைகள் இவைதான் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், ஆனால் அரசிடம் முறையான திட்டம் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ராமர் கோவில் அறக்கட்டளையின் நிதி மோசடிப் புகார் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியிருந்தார்.

அதேபோல், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்திருந்தனர்.

ஜந்தர் மந்தரில் குழப்பம்

இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இந்த பேரணிக்கு நேற்றே தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டிய டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியுள்ளனர்.