மக்களவை  
இந்தியா

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கிய நிலையில் வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகிறது.

இன்றைய கூட்டமும் வழக்கம்போல அமளியால் முடங்கியுள்ளது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி வந்த இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறைக்கு மற்றும் ஆர்ஏஎப் மத்திய படை தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்டவையால் தாக்கியது. மேலும் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.

இந்தியா கூட்டணி போராட்டம்

நாடாளுமன்றத்தின் மகார் துவார் பகுதியில் திரண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கும், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

சபாநாயகர்

முன்னதாக மக்களவை தொடங்கியபோது கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்

இன்று நடந்த நீளம் தாண்டுதல் பிரிவு போட்டியில் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்களுக்கான 100 மீட்டர் T47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் மகாது கவித் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அதே 100 மீட்டர் T47 பிரிவில் முகமது பாசில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.