மழைக்கால கூட்டத்தொடர் 
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாள்: விவாதம் இல்லை.. வந்தே மாதரத்துடன் தொடங்கிய மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 13), தொடங்கிய உடனே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூலை 20 நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணி வந்த மானவர்கள் மீது போலீசார் மற்றும் ஆர்ஏஎப் மத்திய படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. மேலும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.

விவாதம்

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று அமித் ஷா மக்களவையில் இதுகுறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டது.

பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் மக்களவைக்கு வருகை தந்தனர். வந்தே மாதரம் பாடலுடன் அவை தொடங்கிய பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை உடனே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதன்மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா இருவரும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு செவி சாய்க்கப்படவில்லை என்று ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

மறுபுறம் இன்று மாநிலங்களவை வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

முன்னதாக அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் முதலில் இசைக்க வேண்டும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமான நிலையில் இன்று இரு அவைகளிலும் வந்தே மாதரம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.