ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் "பஹல்காம் படுகொலை மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியது. இது நம்முடைய நாகரீக வரலாற்றின் மிகவும் கொடூரமாக தாக்குதல் சம்பவமாகும்.
இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இன்னும் அதிகமாக அடித்து நொறுக்கியிருக்க வேண்டும்.
பாராளுமன்ற பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க பிரதிநிதி குழுகள் சென்றுள்ளது, அரசு செலவில் பிரதிநிதிகள் சந்தோசமாக பொழுதை கழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்றார்.