பரூக் அப்துல்லா
இந்தியா

காஷ்மீரிகளை பாகிஸ்தான் பாதுகாக்கிறது, மோடி அரசு மவுனம் காக்கிறது: பரூக் அப்துல்லா

பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று எல்லா இடங்களிலும் கூறி வருகிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, பாரமுல்லாவில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பரூக் அப்துல்லா பேசியதாவது:-

சர்வதேச மாநாடுகளில் காஷ்மீர் பிரச்சனையை தொடர்ந்து வலியுறுத்தி பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மக்களை பாதுகாத்து வருகிறது. சர்வதேச அழுத்தத்திற்காக மத்திய அரசு அமைதி காக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் காஷ்மீர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று எல்லா இடங்களிலும் கூறி வருகிறார். அவர் நம்மை பாதுகாத்து வருகிறார். இந்தியாவின் நோக்கங்கள் நல்லவை அல்ல.

டெல்லியிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

டெல்லியிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் உங்களுக்கு நீதியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா? போராடுவதற்கான துணிச்சலைக் கொண்டிருங்கள். இல்லையெனில், நீங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவீர்கள். உங்கள் அடையாளமே மறைந்துவிடும்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுகிறது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறிவைத்து இடிப்பு

முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறிப்பாக குறிவைக்கப்பட்டு இடிக்கப்படுகின்றன. சமூகத்தின் நலன்களையும் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை அவசியம்.

பல தொலைக்காட்சி சேனல்களும் ஊடக நிறுவனங்களும் தங்கள் சுதந்திரமான செயல்பாட்டைக் கைவிட்டு, ஆளும் தரப்பின் விலைபேசப்பட்ட ஊதுகுழல்களாக மாறிவிட்டன.

அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தம் மற்றும் நிதிச் சலுகைகள் காரணமாக ஊடகங்களின் தலையங்க சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை ஊடகங்களால் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியவில்லை.

அரசாங்கத்தை விமர்சித்துச் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகின்ளனர். கருத்து தெரிவிப்பவர்கள் மீது காவல்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டு மிரட்டப்படுகின்றனர்.

இவ்வாரூ பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

மறுபுறம், பாஜக மற்றும் அக்கட்சி ஆளும் மாநில அரசுகள், இடிப்பு நடவடிக்கைகள் என்பவை சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகின்றன என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்களின் மதம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT