இந்தியா

பாகிஸ்தான் அமைச்சர் டெல்லி தர்காவை பார்வையிட விரும்பிய நிலையில் அனுமதி மறுப்பு

டெல்லியில் ஷாங்காய் உச்சி மாநாட்டின் கூட்டம் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.

டெல்லியில் இன்று தொடங்கி நடைபெறவுள்ள ஷாங்காய் உச்சி மாநாட்டின் (SCO) கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் காலநிலை அமைச்சர் முசாதிக் மாலிக், தாஜ் மஹாலை தான் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஷாங்காய் உச்சி மாநாட்டின் கூட்டம் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் காலநிலை அமைச்சர் முசாதிக் மாலிக் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலையும், தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவையும் பார்வையிட விரும்புவதாக பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் மாலிக்கின் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியாவிற்கு வருகை தரும் அவர், வேறு எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2023-ல் கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்துகொண்ட பிறகு, ஒரு பாகிஸ்தானிய மத்திய அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

மேலும், 2025 மே மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் ராணுவ பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கைக்கு பின்னர், ஒரு பாகிஸ்தானிய அமைச்சர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமும் இதுவே ஆகும்.

வழக்கமான நடைமுறையின்படி, பாகிஸ்தான் உட்பட அனைத்து ஷாங்காய் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா அக்டோபர் 28 அன்று அறிவித்திருந்தது.

இதையடுத்து முசாதிக் மாலிக்கின் பங்கேற்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பரஸ்பர மரியாதை உணர்வுடன், ஷாங்காய் உச்சி மாநாட்டில் நாகரிகங்களுக்கு இடையே உரையாடலை ஊக்குவிப்பதற்கும், மக்களுடனான தொடர்புகளை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்த நிலையில் பாகிஸ்தான் அமைச்சரை அழைத்ததற்காக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் மீதான கொள்கை மாற்றத்தை நியாயப்படுத்தும் வகையில், பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவை கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது குறித்து முசாதிக் மாலிக் தெரிவித்த ஆக்ரோஷமான கருத்துக்களையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

SCROLL FOR NEXT