இந்தியா

CJP போராட்டத்தை ஒட்டி 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

இவ்வளவு அதிகமான ரெயில்களை ரத்து செய்யும் முடிவு, போராட்டக்காரர்களிடம் சரணடைவதற்கு சமம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க கோரி 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) இன்று (அக். 10) நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை முன்னிட்டு, ரயில்வே வாரியம் 250-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. டெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் இதில் அடங்கும்.

அக்டோபர் 9-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் புறப்படும் பயணிகள் ரெயில்கள் மற்றும் அக்டோபர் 10-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் டெல்லி அல்லது ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையங்களுக்கு வந்து சேரும் ரெயில்கள் ஆகியவை இந்த ரத்து நடவடிக்கையில் அடங்கும்.

250 ரெயில்கள் ரத்து:

இந்த இரண்டு நிலையங்களில் இருந்தும் தங்கள் இலக்குகளை நோக்கி புறப்பட இருந்த ரெயில்கள் மற்றும் உள்ளூர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன; இதனால் ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் மொத்த எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளது.

ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ரெயில்வே நிபுணர்கள், பயணிகள் நல அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புகள் ஆகியவை இந்த முடிவை "முன்னெப்போதும் இல்லாதது", "துரதிர்ஷ்டவசமானது" மற்றும் "பயணிகளுக்கு எதிரானது" என்று விமர்சித்துள்ளன.

"இவ்வளவு அதிகமான ரெயில்களை ரத்து செய்யும் முடிவு, போராட்டக்காரர்களிடம் சரணடைவதற்கு சமமாகும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது," என்று ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் சுபோத் ஜெயின் கூறினார். கடந்த காலங்களில் போராட்டங்கள் காரணமாக ஒன்று அல்லது இரண்டு ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வுகள் இருந்தபோதிலும், ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஒருபோதும் நடந்ததில்லை:

திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த ரத்து நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், அவர்களில் பலர் அவசர மருத்துவ தேவைகள், வேலை அல்லது குடும்ப நிகழ்ச்சிகளுக்காக பயணம் செய்பவர்களாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஊரடங்கு காரணமாக மட்டுமே ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. மற்றபடி, குறிப்பாக ஒரு போராட்டத்தின் காரணமாக இவ்வளவு பெரிய அளவில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது ஒருபோதும் நடந்ததில்லை என்று மிஸ்ரா கூறினார்.

SCROLL FOR NEXT