இந்தியா

அசாமில் 2 நாட்களில் 1,100க்கும் மேற்பட்ட வங்காளி முஸ்லிம்கள் வெளியேற்றம் - வீடுகள்,10 மசூதிகள் இடிப்பு

பிரிட்டிஷ் கால வன மேலாண்மை முறையின் கீழ் வாழ்ந்து வருவதாகவும், அவர்களை சாதாரண ஆக்கிரமிப்பாளர்களாககருதக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.

அசாமில் கடந்த 2 நாட்களில் 1,100க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்களின் , 10 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.

அசாமில் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பாஜக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் வங்காளி முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 2 நாட்களில் 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அங்கிருந்த பெங்காலி முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

நாகோன், கோலாகாட் மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் இந்த இடிப்புகள் நடைபெற்றன.

இதற்கிடையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சில மசூதிகள் உட்பட, சுமார் 10 மசூதிகளையும் அதிகாரிகள் இடித்தனர்.

இடிப்பு

நாகோன் மாவட்டத்தில் உள்ள லுதுமாரி லாங்ஜாப் வனப்பகுதியில், வன நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டி, 600க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் வீடுகளை அதிகாரிகள் நேற்று இடித்தனர்.

சனிக்கிழமையன்று, மூன்று மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 547 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.

இதில் நாகோனில் 336 குடும்பங்களும், ஹோஜாயில் 152 குடும்பங்களும், கோலாகாட்டில் 59 குடும்பங்களும் அடங்கும்.

ஆக்கிரமிப்பாளர்கள்?

குறிப்பாக லுதுமாரி லாங்ஜாப் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், வனப்பாதுகாப்புப் பகுதிக்குள் உள்ள 300 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தில் பல தசாப்தங்களாக வசித்து வந்தனர்.

தாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற அரசின் குற்றச்சாட்டை அக்குடும்பங்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளன.

தாங்கள் உண்மையில் வனத்துறையின் கீழ் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருவதாகவும், அரசாங்கமே தங்களை அங்கு குடியேற்றியதாகவும் கிராமவாசிகள் கூறினர்.

"1974ல் அரசாங்கமே எங்களை இங்கு குடியமர்த்தியது. எங்களுக்கு முன்னோர்கள் நிலமற்றவர்களாக இருந்ததால், அரசாங்கம் அருகிலுள்ள ஜூரியா நகரத்திலிருந்து எங்களை இங்கு குடியமர்த்தியது" என வீடிழந்த ஒருவர் அடுத்து எங்கு போவதென தெரியாமல் நிர்கதியுடன் பேட்டி அளித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், அகில இந்திய வனத் தொழிலாளர் சங்கம், லுதுமாரி லாங்ஜாப் வனக் காப்பகத்திலிருந்து கிராமவாசிகளை வெளியேற்றுவதை நிறுத்துமாறு அசாம் அரசை வலியுறுத்தியிருந்தது.

அவர்கள் பிரிட்டிஷ் கால 'தாங்க்யா' வன மேலாண்மை முறையின் கீழ் வாழ்ந்து வருவதாகவும், அவர்களைச் சாதாரண ஆக்கிரமிப்பாளர்களாககருதக்கூடாது என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால் தற்போது வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT